இளம் மருத்துவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு பணியில் பத்திரிக்கையாளர்களையும் முன்களப்பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலின் அவசர நிலையை கருத்தில் கொண்டு இளம் மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *