பீகார் மாநிலத்தில் பெண்களை பல மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பீகார் மாநிலத்தில் முசார்பூர் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு கும்பல் தங்களுடைய மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அதிக சம்பளத்திற்கு வேலை இருப்பதாக இளம் பெண்களை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளனர். இவர்களிடமிருந்து தப்பித்து வந்த ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தான் தற்போது அந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் தப்பித்து ஓடிய நிலையில் அவர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

அங்கிருந்து மீட்கப்பட்ட இளம் பெண்கள் கொடுத்த வாக்குமூலம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. அதாவது மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை இருப்பதாக கூறி பெண்களை முதலில் ஒரு இடத்திற்கு வரவழைத்துள்ளனர். இதை நம்பி ஒரு பெண் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அங்கு சென்றுள்ளார். இதை நம்பி அந்த பெண் அங்கு சென்ற நிலையில் அவருடன் பல பெண்கள் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் வேறு இடத்திற்கு சென்ற நிலையில் வேலை இருப்பதாக கூறி பெண்களுக்கு தொடர்பு கொண்டு பேசுமாறு கூறி உள்ளனர். அவர்களை அப்படி பேசிய நிலையில் அந்தப் பெண்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து மாத கணக்கில் துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இதனால் உருவான கருவையும் அவர்கள் கலைத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.