இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்…. 8,700 காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இந்திய ராணுவம் பொதுப் பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின்படி 1-12ஆம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது. தற்போது இந்திய ராணுவம் பொதுப் பள்ளிகளில் காலியாகவுள்ள இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக அரசு தெரிவித்து உள்ளது. இந்த பணியில் 8000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு 29-40 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் 5 வருடங்கள் பணி அனுபவம் இருப்பவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 5 ஆண்டுக்கு அதிகமாக பணி அனுபவம் பெற்றவராகவும் இருந்தால் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் இதற்கு இளநிலை, முதுநிலை பட்டமும், பிஎட் படிப்பும் முடித்தவராக இருத்தல் வேண்டும். இளநிலை ஆசிரியர் பணிக்கு இளநிலை பட்டமும் மற்றும் பிஎட் படிப்பும் சிறந்த மத்திய, மாநில அரசால் நடத்தப்படும் CTET/TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இப்பணிக்கு ராணுவ நலன்புரி கல்வி சங்கம் நடத்தும் ஸ்கிரினீங் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கற்பிக்கும் திறன், கணினி பயன்படுத்தும் திறன் தேர்வு முறைகளின் வாயிலாக உள்ளிட்ட தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் http://www.register.cbtexams. in/AWES/Registration என்ற இணையதள மூலமாக ஆன்லைன் முறையில் வருகிற 28ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும். இத்தேர்வு கட்டணமாக ரூபாய் 385 செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு நுழைவு சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெறலாம்.

தற்போது இந்நிறுவனத்தில் உள்ள பணியினை பற்றியும் மற்றும் காலிப் பணியிடங்களை பற்றியும் விரிவாக பார்க்கலாம்

நிறுவனம்- ராணுவ நல கல்வி சங்கம்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை- 8,700

பணியின் பெயர்- TGT(Trained Graduate Teachers), PGT (Post Graduate Teacher)

இந்த பணிக்கான தேர்வுகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறும் தேதி- 19.02.2022 மற்றும் 20.02.2022

தேர்வு நுழைவுச் சீட்டை- 10.02.2022

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்- சென்னை, கோயம்புத்தூர்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி- 28.01.2022

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி- 28.02.2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *