இல்லத்தரசிகளுக்கான சமையல் குறிப்பு பற்றிய டிப்ஸ்..!!

இல்லத்தரசிகளுக்கான சமையல் குறிப்புகள். உணவில்  தேவைப்படுகின்ற சில விஷியங்களை  தெரிந்து கொள்ளலாம்.

பத்து நிமிடம் வரை உருளைக்கிழங்கை உப்பு கலந்து தண்ணீரில் ஊறவைத்து பின்பு வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும். மேலும் ருசியாகவும் இருக்கும். காய்கறி பொரியல் மீதம் ஆகிவிட்டால் சப்பாத்தி அல்லது தோசையில் வைத்து உருட்டி ஸ்டஃப்டு சப்பாத்தி, தோசை செய்யலாம். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

ஈரம் பட்டு நமத்துப் போன அப்பளத்தை உளுத்தம் பருப்பின் மேல் வைத்து மூடி விட்டால், அப்பறம் வெயிலில் உலர்த்தி எடுத்தது போல் ஆகிவிடும். பாகற்காயை சமைப்பதற்கு முன்பு அரை மணி நேரம் உப்பு கலந்த தண்ணீரில் ஊறவைத்தால் கசப்பு தன்மை நீங்கி விடும். நெய் கெடாமல் இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.

வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை நறுக்கிய பின்பு மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்தால் கரையும் பிடிக்காது, நிறம் மாறாமலும் இருக்கும். மழைக் காலங்களில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருக்க நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.

தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருப்பதற்கு இஞ்சியின் தோலை சீவி விட்டு சிறிதளவு தட்டி தயிரில் போட்டு வைத்தால் புளிக்காது. கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி அளவு பால் சேர்த்து பிசைந்தால் கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும். ரவா உப்புமா அதிகமாகிவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடைபோல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால், அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக இருக்கும். எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை ஏற்படாது.

சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை பிசைந்து சமையலில் சேர்த்தால் அதிகப்படியான உப்பை உருளைக்கிழங்கு உரிந்து விடும். இட்லி செய்யும் பொழுது மாவில் ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி செய்தால் இட்லி மிருதுவாகவும் இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.