இலை பறித்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் கொத்தனாரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுத பூஜையை முன்னிட்டு மாமரத்தில் ஏறி இலைகளை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏழுமலை மீது உயரழுத்த மின்கம்பி உரசி விட்டது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏழுமலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *