இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்.. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.சி.ஏ சங்கத்திற்கு சொந்தமான மாதா கோட்டையில் உள்ள செல்லப்பிராணிகளின் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் இலவசமாக வெறிநாய் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த தடுப்பூசியானது வருகிற திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை போடப்படுகிறது. அதனால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் மூன்று மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தங்கள் செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொடிய நோயில் இருந்து தங்கள் செல்லப் பிராணிகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.