இலவச நாப்கின்… ஆந்திராவில் அசத்தல் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..!!!

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. ஜெகன்மோகன் ரெட்டி எப்பொழுதும் அதிரடியான பல நலத்திட்டங்களை அறிவிப்பார். அதேபோல தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். பெண்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் சுமார் 10 லட்சம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் பத்து சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பதை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திட்டத்தை அமல் படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாப்கின்கள் வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *