இலவச தரிசன நடைமுறையில் திடீர் மாற்றம்…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

பக்தர்களுக்கான இலவச தரிசன நடைமுறையில் மாற்றத்தை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா  மூன்றாம் அலை  குறைய தொடங்கியதை  தொடர்ந்து மார்ச் மாதம் முதல் திருமலை திருப்பதியில் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச தரிசனம், கட்டண தரிசனம் என நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான பக்தர்கள் டோக்கன் வாங்க குறைந்ததால் கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு கவுண்டர்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் வார இறுதியில் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் நேற்று கவுண்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டு இலவச தரிசன டோக்கன் வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பெற ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு  3 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டு பக்தர்கள் அனைவரும் டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இலவச தரிசன டிக்கெட் கவுண்டரில் பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் எடுத்து இனிமேல் முன்பு இருந்ததுபோல் டோக்கன் வழங்காமலேயே பக்தர்கள் இலவச தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *