இலவச தரிசன டிக்கெட் ரத்து… திருப்பதி பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 11ஆம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் திங்கட்கிழமை வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 13 ஆம் தேதி முதல் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *