திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் தாழைக்குடி தியாகராஜபுரம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு தாழைக்குடி ஊராட்சி தலைவர் தாளை சிவ மகேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கொரடாச்சேரி ஒன்றிய கழக செயலாளர்கள் சேகர் பாலச்சந்திரன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

இந்நிலையில் முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு கண்புரை நோய் உள்ளவர்களுக்கு உணவு, தங்குமிடம் மருந்து மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தும் வழங்கி கண் அறுவை சிகிச்சைக்கு இலவசமாக பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த முகாம் மூலமாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.