இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்யாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு உதவிவரும் வேளையில் சீனா 10.06 மில்லியன் லிட்டர் டீசலை இலங்கைக்கு இலவசமாக வழங்கியுள்ளது. நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட  இந்த டீசல் இன்று முதல் நெல் விவசாயிகளுக்காக இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அறுவடை செய்யவுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.