தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். இதனால் தற்போது வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுதான் பேசும் பொருளாக மாறி உள்ளது. சிலர் பிரபாகரன் உயிருடன் இருக்கலாம் என்று கூறும்போது சிலர் அவர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். அதன் பிறகு இலங்கை ராணுவம் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி பிரபாகரன் நீர்மூழ்கி கப்பலில் தப்பித்து சென்றுள்ளதாக தற்போது ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார். இலங்கை இறுதி போரின் போது பிரபாகரன் தப்பித்து சென்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு பாரிஸில் இருந்து முக்கிய நபர் ஒருவர் அழைத்து திருச்சியில் உள்ள ஒரு இளைஞருக்கு உதவ சொன்னாராம். அந்த இளைஞர் தான் கடைசி நேரத்தில் பிரபாகரனை காப்பாற்றி நீர் மூழ்கி கப்பலில் ஏற்றி விட்டதாக கூறியுள்ளார். மேலும் அந்த இளைஞர் தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.