கடலூர் மாவட்டத்தில் உள்ள பழவன்குடி கிராமத்தில் அம்சாயல்(90) என்ற மூதாட்டி வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். நேற்று பகல் 2 மணிக்கு மூதாட்டியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது  சணல் வெடியை  தெருவில் வைத்து வெடித்துள்ளனர். வெடி ஆங்காங்கே சிதறி கிடந்தது. இந்த நிலையில் மேளம் அடித்துக் கொண்டிருந்த ஆகாஷ் மீது சணல் வெடி வெடித்து சிதறியது.

இதனால் படுகாயமடைந்த ஆகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆகாஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதே போல அந்த கிராமத்தில் வசிக்கும் சுந்தரமூர்த்தி, நித்திஷ் ஆகியோரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.