இறுதிப் போட்டியை இழந்த இந்தியாவுக்கு ஆறுதல் கிடைக்குமா?…. ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்…..!!!!

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் வங்காளதேசம், ஹாங்காங் முதல் சுற்றில் வெளியேறியது. அதனை தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு தடவை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் 2 வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடமும் தோற்றது.

இதனையடுத்து நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி வெளியேற்றப்பட்டது. 2 வெற்றிகளை பெற்ற பாகிஸ்தான், இலங்கை அணிகள் 11ஆம் தேதி நடைபெறுகின்ற இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இரவு 7:30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்க உள்ளது. ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கும் இதே நிலைதான். இதனால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தினேஷ் கார்த்திக், அக்ஷர் படேல் ஆகியோர் இன்றைய இடத்தில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை மோதிய மூன்று 20 ஓவர் போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றது.