இறுதிசடங்கு நடத்தப்பட்ட… கணவர் வீடு திருப்பியதால்… அதிர்ந்துபோன மனைவி…!!

பெண் ஒருவர் தன் கணவருக்கு இறுதிச்சடங்கு நடத்திய நிலையில் அவர் வீடு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹோண்டூராஸ் என்ற நாட்டை சேர்ந்த ஜூலியோ சர்மீன்டோ (65). இவரின் மனைவி விக்டோரியா சர்மீன்டோ. இந்நிலையில் வெளியில் செல்வதாக கூறிச் சென்ற ஜூலியோ பல நாட்கள் கடந்த நிலையிலும் வீடு திரும்பவில்லை. இதனால் விக்டோரியா கணவரின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் மருத்துவமனையின் அடையாள அட்டையை பார்த்த ஊழியர்கள் இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் சமீபத்தில்தான் கொரோனா பாதித்து உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் விக்டோரியாவின் கணவரை அடையாளம் காட்டுவதற்காக அவரின் உடல் 30 மைல் தூரத்திலிருந்து அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து விக்டோரியாவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் கூடி இரவு முழுவதும் கண்விழித்து துக்கம் அனுசரித்துள்ளனர். அதன் பின்பு மறுநாள் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனைத்தொடர்ந்து நான்கு நாட்கள் விக்டோரியாவின் வீட்டிற்கு வந்து உறவினர்கள் துக்கம் விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று வீட்டிற்குள் வந்த விக்டோரியாவின் கணவர் ஜூலியோவை கண்டு விக்டோரியா ஆடிப்போயிருக்கிறார். அதன்பின்பு விசாரித்த போது ஜூலியோ நடைபயிற்சி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனால் பல நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அங்கேயே கிடந்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. எனினும் தற்போது கணவர் வந்த சந்தோஷத்தில் இருக்கும் விக்டோரியா இறுதி சடங்கிற்க்காக 320 டாலர்கள் செலவிட்டுள்ளதாக வருத்தம் அடைந்துள்ளார். மேலும் மருத்துவமனை தான் வேறு ஒரு நபரின் உடலை தவறுதலாக தந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் விக்டோரியா தான் அவரின் கணவர் என்று ஒருவரின் உடலை அடையாளம் காட்டினார் என்று கூறியுள்ளது. மேலும் அவர் இதற்காக நீதிமன்றம் சென்றால் அதனை எதிர்கொள்வதற்கு சாதகமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *