இறந்த தீயணைப்பு வீரர்களுக்கு… தீ தொண்டு நாளை முன்னிட்டு… மலர் வளையம் வைத்து அஞ்சலி..!!

பெரம்பலூரில் பணியிலிருந்து இறந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீ தொண்டு நாளை முன்னிட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தீயணைப்புத்துறை சார்பில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை தீ தொண்டு நாள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி தீ தொண்டு நாள் வாரம் பெரம்பலூர் தீயணைப்பு அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் கடைபிடிக்கப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, நிலைய அலுவலர் உதயகுமார் ஆகியோர் தீயணைப்பு துறையில் பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாவட்டம் முழுவதும் நேற்று முதல் பொதுமக்களிடம் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி தீ விபத்தில் இருந்து எவ்வாறு தப்பிப்பது ? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். அதேபோல் தீ தொண்டு தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறை சார்பில் இறந்த வீரர்களுக்கு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *