இரு பாகங்களாக வெளியாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… வெளியான புதிய தகவல்…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் புஷ்பா படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

Pushpa-2 is confirmed!

இந்நிலையில் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . அதாவது இந்த படத்தின் கதை நீளமாக இருப்பதால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்த பின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. மேலும் வருகிற அக்டோபர் மாதம் புஷ்பா படத்தின் முதல் பாகத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *