இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடம்பராயன்பட்டியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுத பூஜை விழாவை கொண்டாடுவதற்காக மேட்டுசாலையில் உள்ள தனது மகன் கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து தனது மருமகள் கஸ்தூரி மற்றும் பேரன் சரணுடன் கடம்பராயன்பட்டியிலுள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரேஅருண்குமார் எனும் சிறுவன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதியது.இதில் சத்தியமூர்த்தி, கஸ்தூரி, சரண் மற்றும் அருண்குமார் ஆகிய 4 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள், அந்த 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து வந்த நிலையில் சத்தியமூர்த்தி மற்றும் அருண்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *