கேரள மாநிலத்தில் வேணு (65), உஷா (60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜிதன் என்ற மகன் இருக்கும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி வினிஷா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் நால்வரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய பக்கத்து வீட்டுக்காரர் ரிது ஜெயன் (28). இவருக்கும் வேணு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்ட நிலையில் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன் விரோதம் இருந்த நிலையில் நேற்று இரவு தகராறு நடந்துள்ளது. இதனால் ரிது அவர்களுடைய வீட்டுக்குள் இரும்பு கம்பியுடன் நுழைந்த  நிலையில் நால்வரையும் சரமாரியாக அடித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வேணு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில் மருமகள் மற்றும் மனைவி இருவரும் ஹாஸ்பிடலில் உயிரிழந்தனர். அவர்களுடைய மகனுக்கு மட்டும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரிது ஜெயனை கைது செய்த நிலையில் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அவர் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.