இருமல் மருந்து குடித்து இறந்த விவகாரம்… பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு..!!

இருமல் மருந்துகளை பரிசோதிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூடங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கிடையே கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருமல் மருந்து குடித்து 44 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இதனால் இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அரசாங்க ஆய்வுக்கூடத்தில் அவற்றை பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம் என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் கடந்த 22ஆம் தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து இருமல் மருந்துகளை பரிசோதிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூடங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.