இருசக்கர வாகனம்-கார் மோதல்… கணவன் மனைவி படுகாயம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள மீனாட்சிபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் தேனியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது சின்னமனூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.

அந்த காரை புலிக்குத்தியில் வசித்து வரும் தமிழரசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து அந்த கார் எதிர்பாரதவிதமாக செல்வத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வம் மற்றும் மாரியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு போடி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போடி நகர் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *