இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்துள்ள புதுவலசை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உச்சிப்புளி பகுதியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் உச்சிப்புளியில் இருந்து அப்பகுதியில் உள்ள தோப்பிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக நாகராஜ் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உச்சிப்புளி காவல்துறையினர் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நாகராஜ் மீது மோதிய கார் ஓட்டுநர் கோயம்புத்தூரை சேர்ந்த நாகராஜன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *