தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் விஜய் பரந்தூர் சென்று ஏர்போர்ட்டுக்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் திமுக கட்சி அமைச்சர்கள் பரந்தூர் ஏர்போர்ட் குறித்து விஜய் புரிதல் இல்லாமல் பேசி வருவதாக விமர்சிக்கிறார்கள்.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தபோது விஜயை மறைமுகமாக விமர்சித்தார். இது பற்றி அவர் கூறியதாவது, இருக்கிற தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்த பல நடிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அப்போதும் வந்த நடிகர்கள் எல்லாம் எம்ஜிஆர் போன்றவர்கள் என்றும் கொள்கை பிடிப்போடு கழகத்தில் இணைந்து செயலாற்றி வருவதாகவும் கூறினார்கள். அப்படி இல்லாதவர்கள் இன்று கட்சி தொடங்கி திடீரென முதல்வராகி விடலாம் என்று கனவு காண்கிறார்கள். மேலும் அவர்களின் கனவு தவிடுபிடி ஆகும் என்று கூறியுள்ளார்.