இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் லக்னோ, பஞ்சாப், டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் இதுவரை கோப்பையை வென்றது கிடையாது. இந்நிலையில் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொள்ளும் அணி வீரர்கள் தான் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இரவு முழுவதும் பார்ட்டியில் கலந்து கொண்ட பின் பகலில் எப்படி விளையாட முடியும். சென்னை அணியின் வீரர்கள் இதுவரை இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டதே கிடையாது. அதனால்தான் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலமுறை கோப்பையை வென்றுள்ளனர். ஆனால் சில அணியின் வீரர்கள் பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். அதனால்தான் அவர்களால் கோப்பையை இதுவரை வெல்ல முடியவில்லை என்று கூறினார். அப்போது அவரிடம் நீங்கள் பெங்களூர் அணியை கூறுகிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை என்று கூறினார். அதோடு இங்கு சில அணிகள் கோப்பையை வெல்லவில்லை. மேலும் சில அணிகள் மிகப்பெரிய அளவில் பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.