கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்களா பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு சாலையில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் திடீரென இளம் பெண்ணின் மீது கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக கத்தி கூச்சலிட்டார்.

இதனால் பயந்து போன அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை இளம் பெண் விரட்டி சென்றார். இருப்பினும் பிடிக்க முடியவில்லை. அவர் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.