இரண்டு மடங்கு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான முதலீடு திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!!!!

பாதுகாப்பு என்ற கோணத்தில் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக தபால் அலுவலகம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தபால் அலுவலகத்தில் நல்ல வட்டியும் கிடைக்கின்றது. அந்த வகையில் தபால் அலுவலகத்தின் சூப்பர்ஹிட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்தால் போதும் அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக வட்டி பணத்தை பெறுகிறீர்கள். வயது முதிர்ச்சி அடையும் போது மொத்த தொகையும் திரும்ப கிடைக்கின்றது. மேலும் இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தபால் அலுவலக மாதாந்திர வருமானம் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 மற்றும் 100 மடங்குகளில் பணத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

இதில் அதிகபட்சமாக 4.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம். இந்த வரம்பு ஒற்றை கணக்கிற்கான அதேநேரம் கூட்டு கணக்கிற்கான அதிகபட்ச வயது வரம்பு ரூபாய் ஒன்பது லட்சம் இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் மூன்று பேர் கூட்டு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். மேலும் மைனராக இருக்கும் குழந்தைகளுக்கும் அவரது பெற்றோரின் பெயரில் கணக்கை தொடங்கலாம். பத்து வருடங்களுக்கு பின் குழந்தையின் பெயரிலும் தபால் அலுவலகம் எம்ஐஎஸ் கணக்கை திறந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதல் முதலீடு செய்துகொள்ளலாம். தற்போது 6.6 சதவிகிதம் வட்டி விகிதம் அடிப்படையில் கிடைக்கும் வட்டி அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகிறது.

ஆனால் கணக்கு வைத்திருப்பவர் இதில் மாதாந்திர வட்டியை கோரவில்லை என்றால் இந்த பணத்திற்கான கூடுதல் வட்டியின் பலனை அவர் பெறமாட்டார். மேலும் இந்த தபால் அலுவலகத்தில் முதிர்வு ஐந்து வருடங்கள் ஆகும் இந்த கணக்கைத் திறந்து ஒரு வருடம் வரை நீங்கள் பணத்தை எடுக்க முடியாது. நீங்கள் அதை ஒன்று முதல் மூன்று வருடங்களுக்குள் மூட விரும்பினால் உங்கள் அசல் தொகையில் 2% கழிக்கப்படுகிறது. அதே சமயத்தில் மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் கணக்கை மூடுவதற்கு ஒரு சதவீதம் அபராதம் அளிக்கப்படும் இந்த கணக்கில் யாராவது ஒரு முறை 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் 275 ரூபாய் அதாவது ஐந்து வருடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3,300 ரூபாய் கிடைக்கும் ஐந்து வருடங்களில் மொத்தமாக 16 ஆயிரத்து 500 ரூபாய் வட்டியாக கிடைக்கிறது. அதேபோல் ஒருவர் ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் அவருக்கு மாதம் ரூபாய் 550 அதாவது வருடத்திற்கு ரூபாய் 6600 ஐந்து ஆண்டுகளில் 33 ஆயிரம் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில், 4.5 லட்சத்தை டெபாசிட் செய்தால் மாதம் ரூ.2475, ஆண்டுக்கு ரூ.29700 மற்றும் ஐந்தாண்டுகளில் வட்டியாக ரூ.148500 கிடைக்கும். இந்த சிறந்த திட்டத்தில், ஒரு கணக்கு வைத்திருப்பவர் முதிர்வுக்கு முன் உயிரிழந்துவிட்டால், இந்தக் கணக்கு மூடப்படும். அத்தகைய சூழ்நிலையில் அசல் தொகை நாமினிக்கு திருப்பித் தரப்படுகிறது. இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்தால், பிரிவு 80C-ன் கீழ் வருமான வரி விலக்கின் பலன் கிடைக்காது. அஞ்சலகத்திலிருந்து பணம் எடுக்கும்போது அல்லது வட்டி வருமானத்தில் டிடிஎஸ் கழிக்கப்படுவதில்லை. இருப்பினும், இந்த வட்டி வருமான வரிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.