இரண்டாவது மனைவியை பார்த்துவிட்டு வந்தவர்…. விபரீத முடிவுக்கு காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

மேலாளர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம், சூலை 6-வது தெருவில் வசித்து வந்தவர் பழனி(50). இவர் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கின்ற ஒரு பார்சல் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் தனது இரண்டாவது மனைவியை திருவாரூரில் சென்று பார்த்துவிட்டு சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பழனி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெரியமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த போலீசார் பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் பழனி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்