தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் தற்போது படங்களிலும் நடித்து வரும் நிலையில், இவர் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவர் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் கீதாஞ்சலி ராமன் என்பவரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு தற்போது 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீப காலமாகவே செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி விவாகரத்து செய்து பிரிய போவதாக இணையதளங்களில் தகவல்கள் தீயாக பரவியது. ஏனெனில் செல்வராகவன் அண்மையில் தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி இருக்கிறது. துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை பார்த்த பலரும் செல்வராகவன் அவருடைய மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்று கருதினர். ஆனால் செல்வராகவன் தன்னை பற்றி பரவிய வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன் மனைவியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில்  வெளியிட்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி விவாகரத்து வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)