வங்கிகளை காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் அதிகமான வட்டி போன்ற காரணத்தால் ஏராளமான வாடிக்கையாளர்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர். அதன்படி அதிக பலன்களை கொண்ட 5 திட்டங்கள் குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் அதிகபட்சம் 8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 10 வயது பூர்த்தியடைந்த பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கை தொடங்கலாம். இதையடுத்து தேசிய சேமிப்பு திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 7.7% வருடாந்திர வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் குறைந்தது 100 முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரைக்கும் முதலீடு செய்யலாம்.

அதன்பின் மூத்தக்குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் வருடாந்திர வட்டி தொகையாக 8.2 சதவீத வட்டி பெறலாம். 60 வயது முதல் அதற்கு அதிகமான வயதுடைய மூத்தக்குடிமக்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பலன் பெறலாம். அதனை தொடர்ந்து போஸ்ட் ஆபீஸ் நேர வைப்பு திட்டத்தில் 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு (அ) 5 வருடங்கள் என்ற கணக்கில் முதலீடு செய்யலாம். அதோடு போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்பு கணக்கு திட்டத்தில் 5 ஆண்டு திட்டத்தில் கூட்டுக் கணக்கு (அ) தனிநபர் திட்டத்துக்கு ஆண்டு வட்டியாக 6.20 சதவீதம் வழங்கப்படுகிறது.