“இரட்சன்” படத்தின் கதாநாயகன், டிரைக்டர்…. நிகழ்ச்சி மேடையில் இப்படிதான் பேசுனாங்க….!!!!!

தெலுங்குத் சினிமாவில் எவர் கிரீன் இளமை நாயகனாக வலம் வருபவர் நாகார்ஜுனா. 30 ஆண்டுகளுக்கு முன் அவர் நடித்து தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்த இதயத்தைத் திருடாதே, உதயம் போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. இதையடுத்து நேரடியாக ரட்சகன், பயணம், தோழா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கில் அவர் நடித்துள்ள “த கோஸ்ட்” படம் “இரட்சன்” என்ற பெயரில் டப்பிங் ஆகி நாளை அக்டோபர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பானது இன்று சென்னையில் நடந்தது.

அப்போது நிகழ்ச்சியில் நாகார்ஜுனா பேசியதாவது “சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவன் நான். கிண்டியிலுள்ள இஞ்சினியரிங் கல்லூரியில் தான் படித்தேன். சென்னைத் தெருக்கள் அனைத்தும் நன்கு தெரியும்” என்று அவர் குறிப்பிட்டார். இவருக்கு முன்னதாகப் இயக்குனர் பிரவீன் சத்தரு பேசியதாவது, சென்னை தாம்பரம் அருகேயுள்ள சேலையூரில் இஞ்சினியரிங் கல்லூரியில் படித்தேன் என சென்னைக்கும் தனக்குமான தொடர்பு குறித்து கூறினார். சென்னையில் இஞ்சினியரிங் முடித்த இவர்கள் இரண்டு பேரும் இணைந்து இப்படத்தில் பணிபுரிந்துள்ளார்கள். சென்னையில் அத்தனை வருடங்கள் இருந்தும் இரண்டு பேரும் நிகழ்ச்சி மேடையில் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் தான் பேசினர்.