பிரபல மலையாள இயக்குனரான ஓமர் லூலு, பிரியா வாரியர் நடித்த “ஒரு அடார் லவ்” திரைப்படத்தை இயக்கி பிரபலமடைந்தார். மேலும் இவர் ஹேப்பி வெட்டிங், தமகா ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இப்போது அவர் இயக்கிய “நல்ல சமயம்” என்ற மலையாள திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

இவற்றில் இர்ஷாத் அலி, விஜீஸ், காயத்ரி சங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்நிலையில் நல்ல சமயம் படத்தின் டிரெய்லரில் போதை பொருளை ஊக்குவிப்பது போன்ற காட்சிகள் உள்ளதாகவும், அதில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. அதன்பின் மத்திய கலால்துறை வழக்குப்பதிவு செய்து ஓமர் லூலு மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.