இமாச்சலில் பயங்கர தீ விபத்து…. 4 பேர் மற்றும் பல விலங்குகள் உயிரிழப்பு..!!

சம்பா மாவட்டத்தில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் ஒரே வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். வீட்டைச் சுற்றியும் தீ பரவியதால் பல விலங்குகள், நெருப்புக்கு இரையாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் ஜெயராம் தாகூர் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்தார்.