இப்ப இந்த மாவட்டத்திற்கும்…. 3 நாட்கள்…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை..!!!!

நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாகத் திகழ்கின்றது. இங்கு ஆங்கிலப்புத்தாண்டு நாட்களில் ஏராளமானோர் சுற்றிப் பார்ப்பதற்கு வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளதாவது: “நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்கள், ஓட்டல், தங்கும் விடுதிகள், சுற்றுலாத்தலங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒன்று கூடினால் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத வழிபாட்டு தலங்கள் இன்று இரவு 11 மணிக்குள் மூடப்பட்டு இருக்க வேண்டும். நள்ளிரவு பூஜைக்கு அனுமதி இல்லை, புத்தாண்டு வழிபாட்டில் முக கவசம் அணிந்து, கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும். மூன்று நாட்கள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை பின்பற்ற தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *