
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷால் மதகஜராஜா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உடல்நிலை சரியில்லாமல் மைக்கை கையில் சரியாகப் பிடிக்க முடியாதவாறு கை நடுக்கத்துடன் காணப்பட்டார். இதனால் விஷாலுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று ரசிகர்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.
அதன் பிறகு விஷால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று மதகஜராஜா திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் நேற்று முன்தினம் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக விஷால் வந்திருந்தார்.
அப்போது பேசிய அவர் “3 மாதம் 6 மாத காலம் படப்பிடிப்பிற்கு வர மாட்டேன் என்று நிறைய பேர் சொன்னார்கள். இப்போது எந்த நடுக்கமும் இல்லை, மைக் சரியாக இருக்கிறது. நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை சாகும் வரை மறக்க மாட்டேன்” என்று பேசியுள்ளார்.