“இப்பவே போஸ்டர்கள் மூலம் சண்டை தொடங்கியாச்சா !”…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…!!!!!

இப்போது இருந்தே விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் போட்டியிட்டு வருகின்றார்கள்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் ஆக வலம் வருகின்றார் அஜித் குமார். வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்கின்றார் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க போனி கபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டு இருக்கின்றது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பெயரை அறிவித்த உடனே விஜயின் ரசிகர்கள் துணிவு  பெயரை குறிப்பிட்டு ரசிகர்களை தாக்கும் வகையில் மதுரையில் போஸ்டர் ஒட்டினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் ரசிகர்கள் வாரிசு பட பெயரைக் குறிப்பிட்டு விஜய் ரசிகர்களை தாக்கி போஸ்டர் ஒட்டியுள்ளார்கள். இந்த போஸ்டர்களானது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

போஸ்டர்கள் மூலம் சண்டையிட துவங்கிய விஜய் - அஜித் ரசிகர்கள்! வைரலாகும் போட்டோஸ் | Poster War Between Vijay Ajith Fans

போஸ்டர்கள் மூலம் சண்டையிட துவங்கிய விஜய் - அஜித் ரசிகர்கள்! வைரலாகும் போட்டோஸ் | Poster War Between Vijay Ajith Fans