பெங்களூரில் பிஎம்டிசி பேருந்தில் அபினவ் ராஜ் என்பவர் பயணம் செய்துள்ளார். இவர் பேருந்து நடத்துனரிடம் 15 ரூபாய் டிக்கெட்டுக்கு 20 ரூபாய் கொடுத்துள்ள நிலையில் அந்த நடத்துனர் அவருக்கு மாற்று சில்லறை கொடுக்காமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன்பின் திரும்பி வந்த அவரிடம் அபினவ் மாற்று சில்லரை தருமாறு கேட்டதால் அந்த நடத்துனார் அவரை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் அபினவ் இந்த சம்பவத்தை பற்றியான வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இதற்காக நீதி கேட்டு வருகிறார். அந்த பதிவில் நடத்துனர் மாற்று சில்லரை தர மறுத்ததுடன் கன்னட மொழியில் பேசுமாறு அவரை வற்புறுத்தி தாக்கியுள்ளதும் தெரியவந்தது.

அதன்பின் அபினவ் அந்த வீடியோவில் தன்னை தாக்கிய நடத்துனரை தண்டிப்பதற்காக இந்த வீடியோவை பிஎம்டிசிக்கு அனுப்பி வைத்து புகார் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் கர்நாடகாவில் வெளி மாநிலத்தவர்கள் எதிர்கொள்ளும் மொழி பிரச்சனையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது போன்ற சூழல்களில் கன்னட மொழி தெரியாதவர்கள் ஆதிக்கம் செய்யப்படுவதும் இந்த பதிவின் மூலம் தெரியப்படுகிறது.