இப்படி நடந்தா நல்லாதான் இருக்கும்… ஆனால் இது ஒரு பொய்யான தகவல்… ‘தளபதி 65’ படத்தில் வில்லனாக ஆசைப்படும் பிரபல நடிகர்…!!!

தளபதி 65 படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து பிரபல நடிகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் தளபதி 65 படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது . மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ‘துப்பாக்கி’ பட வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால் தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் நடிகர் வித்யுத் ஜம்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிப்பது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஐ எம் வெயிட்டிங். இந்த செய்தி உண்மையானால் எனக்கு மகிழ்ச்சி . ஆனால் இது பொய்யான தகவல்’ என பதிவிட்டுள்ளார். இதனால் தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்க போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.