இப்படி நடக்கும்னு நினைக்கல… தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… நாகையில் சோகம்..!!

நாகையில் பனைமரம் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புஷ்பவனம் பெத்துகுட்டி தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வந்தார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பனை மரம் ஒன்று வெட்டுவதற்காக அதே ஊரை சேர்ந்த ஒருவருடைய வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பனைமரம் திடீரென அன்பழகனின் மீது விழுந்தது.

அதில் அன்பழகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.