இப்படி சொல்லும் எல்லோரும்…. “ஓசி”யில் பிறந்தவர்கள் தான்…. அமைச்சரை கடுமையாக சாடிய நடிகை கஸ்தூரி….!!!!!

தமிழக அரசு மகளிர்காக இலவச பேருந்து திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனால் ஏராளமான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதற்கிடையில் பொன்முடி பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதை கேலி செய்திருந்தார். இவருடைய பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அமைச்சர் பொன்முடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அரசு செய்யும் எந்தத் திட்டத்தையும் சொந்த கையில் செய்வதில்லை. அமைச்சர் பொன்முடி பேசியது நியாயப்படுத்த முடியாது. ஓசி பஸ் என்று சொல்லும் அவர் உள்ளிட்ட அனைத்து ஆண்களும் பெண்களின் வயிற்றில் ஓசியில் பிறந்தவர்கள் தான் என்று சாடியுள்ளார்.