இப்படி செஞ்சா மட்டும்…. அவரை திறமையானவரா பாக்க முடியாது…. அண்ணாமலை…!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தற்போது சுற்றுப்பயணமாக பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள காவல் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் குறிப்பாக ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் குறித்து விசாரித்தார். இதனையடுத்து இவரின் இந்த செயலானது சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஹெச் ராஜா, கருணாநிதியை விட ஸ்டாலின்  வலிமை வாய்ந்தவர் என்று கூறியதன் அர்த்தம் வேறாகும். இதற்குக் காரணம்  தனிமனிதனாக சிந்திக்கக் கூடியவர் கருணாநிதி. இவ்வாறு இருக்கையில் ஸ்டாலினை வெளியிலிருந்து இயக்குகிறார்கள்.

இதை தான் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும்  திடீரென்று காவல் நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டால், அவரை திறமை வாய்ந்த தலைவராக ஏற்றுக் கொள்ள இயலாது. இதன்பின்னர் திமுக அரசானது பெட்ரோல் விலையை ஜி எஸ் டி.க்குள்  கொண்டுவருவதாக நடத்தும் நாடகத்தை நிறுத்த வேண்டும்” என சர்ச்சையை பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *