
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவன முத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் வருடந்தோறும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் நிர்வாகியாக நாக ராணி அம்மையார் என்பவர் இருக்கிறார். இவர் 48 தினங்கள் விரதமிருந்து விரதத்தின் இறுதி நாள் அன்று முள் படுக்கை மேல் படுத்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம் ஆகும்.

விரத இறுதி நாளன்று கோயிலின் முன்புறம் உடைமுள், இலந்தைமுள், கற்றாழை முள் ஆகியவற்றை வைத்து 7 அடி உயரத்துக்கு முள்படுக்கை அமைக்கப்பட்டு முள் படுக்கைக்கு கற்பூரம் ஏற்றி தீப ஆராதனைகள் செய்து அருள் வாக்கு கேட்பது வழக்கம். இப்பூஜையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.