அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் சோபி ரெயின் எனும் 20 வயது பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் கல்லூரியில் படித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக வயது வந்தவர்களுக்கான வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற செயலிகளிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார். இதன் மூலம் ஒரு வருடத்திற்கு முன்பாகவே அவர் 364 கோடி சம்பாதித்துள்ளார். அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு ஒரு கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை அவர் சம்பாதிக்கிறார். வெறும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அவருக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.
இது குறித்து அந்த பெண் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, என்னை விபச்சாரம் செய்யும் பெண் என்கிறார்கள். ஆனால் நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. என் பெற்றோரின் கடனை அடைத்துவிட்டேன். நீங்கள் என்ன பேசிக் கொண்டாலும் நான் மகிழ்ச்சியாகவே வங்கியை நோக்கி நடப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் கல்லூரியில் படிக்கும் இளம்பெண் கவர்ச்சி புகைப்படங்களால் ஒரு நாளைக்கு ஒரு கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.