இப்படி ஒரு திறமையா…? சேலை அணிந்து செங்குத்து மலை ஏறி சாதனை படைத்த 8 வயது சிறுமி…. குவியும் பாராட்டு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் கிரிஹிதா என்ற 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஊரடங்கு காலத்தில் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரியுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் தற்போது கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்தில் உள்ள ஜிவ்தான் கோட்டையை பாரம்பரிய உடையான நவ்தாரா சேலை அணிந்து ஏறி புது சாதனை படைத்துள்ளார்.

இந்த சிறுமி தன்னுடைய சகோதரியுடன் சேர்ந்து மலையேறும் போது செய்து கொள்ள வேண்டிய எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல் புடவை மட்டும் அணிந்து கொண்டு மலை ஏறி புது மைல்கல்லை படைத்துள்ளார். இவர் தன்னுடைய சகோதரியுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 18 மலையேற்றங்களை செய்துள்ளார். மேலும் சிறுமி இதற்கு முன்பாக எவரெஸ்ட் மலை உச்சியைத் தொட்ட சிறுமி என்ற சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply