இப்படி இருந்தால் இந்துக்களால் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்?…. பத்ருதீன் அஜ்மல் சர்ச்சை கருத்து…..!!!!

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரும், அசாம் அரசியல்வாதியும் ஆன பத்ருதீன் அஜ்மல் புது சர்ச்சை கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்துக்கள் முஸ்லீம் பார்முலாவை ஏற்றுக் கொண்டு தங்களது குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும் என கூறியுள்ளார். முஸ்லீம் ஆண்கள் 20-22 வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர். அதேபோல் முஸ்லீம் பெண்களும் 18 வயதில் திருமணம் செய்கின்றனர்.

ஆனால் 40 வயதிற்கு பின் பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்து கொள்பவர்கள், பின் எப்படி குழந்தைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்க இயலும்?.. ஏனெனில் வளமான நிலத்தில் விதைத்தால் தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்போது தான் வளர்ச்சி ஏற்படும். ஆகவே இந்துக்களும் முஸ்லீம்களின் பார்முலாவை கடைப்பிடித்து தங்களது, குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.