இபிஎஸ்-ஐ ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்…. கோவை செல்வராஜ்…!!!

அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் இபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் மட்டும் இணையவில்லை கூடவே தனது ஆதரவாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் திமுக வளர திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து திமுகவில் இணைந்தபின் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ். இபிஎஸ் நடத்திய ஆட்சி, சுனாமியை போல் தமிழ்நாட்டில் அழிவை ஏற்படுத்திவிட்டது என்று விமர்சித்தார். 4 ஆண்டுகாலம் இபிஎஸ் ஆட்சியை ஆதரித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறிய அவர், முதல்வர் ஸ்டாலின் குறித்து பேச இபிஎஸ்-க்கு எந்த தகுதியும் இல்லை என்றார்.