இன்ஸ்டாவில் லைக் வாங்க இப்படியா பண்றது…. “சாலையின் நடுவே குத்தாட்டம்”… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள முக்கிய சாலைகளில் சந்திப்பு பகுதி ஒன்றில் சிக்னலின் போது இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் பொழுது இளம்பெண் நடு ரோட்டில் வந்து நடனமாடுகிறார். இதனை வாகன ஓட்டுனர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வீடியோ பதிவு ஒன்றிற்காக இந்த நடனம் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது எப்போது நடந்தது என்பது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை.

இருப்பினும் இதை அறிந்த மத்திய பிரதேச அமைச்சர் அப்பெண்ணின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது அந்த பெண் இந்தூரை சேர்ந்த ஸ்ரேயா கல்ரா என்பதும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதற்காக இதுபோன்று நடனமாடியது தெரியவந்துள்ளது. தற்போது அந்த பெண் யார் என்பது தெரிய வந்துள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *