இன்றைய ( 03.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

இன்றைய  பஞ்சாங்கம்

03.04.2020 பங்குனி 21, வெள்ளிக்கிழமை,

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

இன்றைய  ராசிப்பலன் – 03.04.2020

மேஷம்:

இன்று பணவரவு உங்களுக்கு சுமாராகத்தான் கிடைக்கும். நண்பர்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பணிகள் செய்யும் போது கவனமுடன் செயல்படுங்கள், குடும்பத்தாரின் ஆதரவு மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

ரிஷபம்:

இன்று உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நாள் ஆகவே இன்றைய நாள் இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீரான நிலையில் இருக்கும்.  கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு வேலை சம்பந்தமாக உடலில் சோர்வும் அலைச்சலும் உண்டாகலாம். ஆடம்பர செலவுகள் செய்தால் கையிருப்பு பணம் குறைய வாய்ப்புண்டு. நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சகோதர சகோதரிகளின் மூலம் ஓரளவிற்கு அனுகூலமாகவே இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

கடகம்:

இன்று பணப்புழக்கம் கொஞ்சம் அதிகரக்கும். வேலையில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும். சிக்கனமாக செயல்படுங்கள் அதன் மூலம் சேமிக்க முடியும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்களை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதனால் நல்ல லாபத்தையும் அடைவீர்கள். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சிம்மம்:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனையே தரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்வதன் மூலம் நல்ல பலன்  கிடைக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் நினைத்த சுப காரியங்கள் எளிதில் கைகூடும்.

கன்னி:

இன்று கடினமான செயலைக் கூட நீங்கள் எளிதில் செய்து முடிக்கும் திறமையோடும் துணிவோடும் செயல்படுவீர்கள். நல்ல செய்திகள் உங்களை தேடி வரக்கூடும். அதனால்  மனதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். தொழில் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

துலாம்:

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபங்கள் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.

விருச்சிகம்:

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்லுங்கள், தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நல்லது.

தனுசு:

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது ரொம்ப நல்லது. வியாபாரத்தில் பணம் சம்மந்தமான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை.

மகரம்:

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த  உதவி எளிதில் கிடைக்கும். நினைத்த காரியங்கள் தடையின்றி எளிதில் நிறைவேறும்.

கும்பம்:

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்:

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் அனுகூலப் பலன் கிட்டும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *