பிரபல விஸ்தாரா விமான சேவை இன்று கடைசி நாளாக வானத்தில் பறந்து வரும் நிலையில் நாளையிலிருந்து அந்த விமான சேவை முடிவுக்கு வருகிறது. இன்றுதான் விஸ்தாரா விமான சேவையின் கடைசி நாள். அதாவது ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா விமான சேவையை இணைக்க உள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது முழு பணிகள் முடிந்ததால் ஏர் இந்தியா விமானத்துடன் விஸ்தாரா முழுமையாக இணைகிறது.

கடந்த மாதமே விஸ்தாரா விமான சேவை டிக்கெட் நிறுத்தப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதால் விஸ்தாரா விமான சேவையை அந்த நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்தனர். மேலும் நாளை முதல் விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா விமானத்தின் பெயரில் இயக்கப்பட இருக்கிறது.