இன்று முருகனின் அறுபடைவீடுகளில் தைப்பூசம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பார்கள். இந்நிலையில் இன்று “அரசு பொதுவிடுமுறை” அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏற்கனவே பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றாலும் தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்குவது வழக்கம்.

ஆனால், பொதுவிடுமுறை என்பதால், தமிழ் கடவுள் முருகனை தரிசனம் செய்ய ஆறுபடை வீடுகளில் ( மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருவள்ளூர், தஞ்சாவூர் ) அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.