தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அவர் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியலில் மட்டுமே நடிகர் விஜய் முழு கவனம் செலுத்த இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரைப் பற்றிய பல சுவாரசிய தகவல்கள் வெளிவருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் முதல் சம்பளம் குறித்து அவருடைய தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் முன்னதாக கூறிய ஒரு விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது தற்போது ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் தளபதி 69 படத்திற்காக ரூ‌.250 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் முதலில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 1984 ஆம் ஆண்டு அறிமுகமானார். மேலும் அந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு அப்போது ரூ‌.500 சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.